search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை வீடு கொள்ளை"

    மதுரையில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் திருவிளான்பட்டி அன்னை மீனாட்சி நகரைச் சேர்ந்த ராகவன் மனைவி பேபி சசிகலா (வயது 49). இவர் சம்பவத்தன்று காலை வீட்டை பூட்டிவிட்டு அலங்காநல்லூரில் இருக்கும் மகள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

    அப்போது யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 47 கிராம் தங்க நகைகள், 50 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 15 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் வீடு திரும்பிய பேபி சசிகலா, வீடு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் நகை, பணம் கொள்ளை போனது தெரிய வந்தது.

    இதுகுறித்து பேபி சசிகலா அப்பன்திருப்பதி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் ராஜன் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளார். பட்டப் பகலில் வீடு புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரையில் பல்கலைக்கழக அதிகாரி, பேராசிரியர் வீடுகளில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

    மதுரை:

    மதுரை அண்ணாநகர் அன்பு நகரில் உள்ள அன்னை அபிராமி தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (வயது67). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சூப்பிரண்டாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    சம்பவத்தன்று கோபிநாத் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் குற்றாலத்துக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர்.

    பின்னர் பீரோவில் இருந்த 29 பவுன் நகை, ரூ.11 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர். ஊர் திரும்பிய கோபிநாத் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை- பணம் திருட்டுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தல்லாகுளம் விசாலாட்சி புரத்தைச் சேர்ந்தவர் செந்தாமரைகண்ணன் (52). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து 1 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ.1500 ரொக்கம் ஆகிய வற்றை திருடிக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரையில் மேஸ்திரி வீட்டுக்குள் புகுந்து நகை-பணத்தை திருடியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை தாசில்தார் நகர் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் குமார் (வயது47). கட்டிட மேஸ்திரியான இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ.12 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.

    ஊர் திரும்பிய குமார் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை-பணம் திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து குமார் கொடுத்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வாழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரையில் மாநகராட்சி-எல்.ஐ.சி. அதிகாரிகளின் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

    மதுரை:

    மதுரை பொன்மேனி எஸ்.வி.நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது44). இவர் மதுரை மாநகராட்சியில் காசநோய் சிறப்பு பிரிவு மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

    இவரது அண்ணன் அதே பகுதியில் உள்ள விவேக் நகரில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அவர் குடும்பத்துடன் வேளாங்கண்ணிக்கு சென்று விட்டார்.

    அப்போது எங்கள் பகுதியில் திருட்டு பயம் அதிகமாக உள்ளது. எனவே குடும்பத்துடன் வந்து இங்கு தங்கி கொள்ளுமாறு தனது தம்பி ஜெயராஜிடம் கூறி விட்டு சென்றார். அதன்படி ஜெயராஜ் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் அண்ணன் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஜெயராஜின் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன் நகையையும் திருடிக் கொண்டு தப்பினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அண்ணன் வீட்டின் பாதுகாப்புக்காக குடும்பத்துடன் சென்று தங்கிய தம்பி வீட்டில் மர்ம நபர்கள் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை அருகே 2 வீடுகளில் புகுந்து நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரத்தைச் சேர்ந்தவர் வெள்ளைஅய்யனார் (வயது 45). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 4 பவுன் நகை, சில்வர் பொருட்களை திருடிக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அலங்காநல்லூர் போலீஸ் சரகத்துக்குட்பட்ட டி.வாடிப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (44). உடல்நலக்குறைவு காரணமாக இவர் வீட்டை பூட்டிவிட்டு பெருங்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் 1½ பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை திருடிக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #Tamilnews

    ×